Home உலகம் துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் பெரும் தீவிபத்து: 232 பேர் பலி!

துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் பெரும் தீவிபத்து: 232 பேர் பலி!

470
0
SHARE
Ad

_74835943_74835942இஸ்தான்புல், மே 14 – துருக்கியில் உள்ள சோமா நகரில் செயல்படும் நிலக்கரி சுரங்கத்தில், சுமார் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.

நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து செல்லும் போது, சுரங்கத்தின் மின்சாரம் வழங்கும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் 232 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு குழுவினர், 420 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 360 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே சுரங்கத்துக்குள் மேலும் 200 பேர் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. இதுவரை நடந்த விசாரணையில், கார்பன் மோனாக்சைடு விஷ வாயு வெளியானதே விபத்துக்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக துருக்கி பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன், தான் செல்ல இருந்த அல்பானியா நாட்டு பயணத்தை தள்ளி வைத்தார்.

மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட அவர், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.