Home India Elections 2014 தேர்தல் கருத்து கணிப்புகளை ஏற்க முடியாது – நாளை உண்மை தெரியும் – மு.க.ஸ்டாலின்

தேர்தல் கருத்து கணிப்புகளை ஏற்க முடியாது – நாளை உண்மை தெரியும் – மு.க.ஸ்டாலின்

768
0
SHARE
Ad

stalinதிருச்சி, மே 15 – ‘‘வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்ற கருத்து கணிப்புகளை ஏற்க முடியாது, 16–ஆம் தேதி (நாளை) உண்மை தெரியும்’’ என்று மு.க. ஸ்டாலின் கூறினார். தி.மு.க.வின் மறைந்த முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் 95–வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருச்சி கரூர் பைபாஸ் சாலை கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”பாராளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த தேர்தல் பணநாயக அடிப்படையில் தான் நடந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் முடிந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்து இருந்தது.

#TamilSchoolmychoice

144 தடை உத்தரவு போட்டு எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆளும் கட்சி வாக்காளர்களுக்கு பணத்தை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் பல வகைகளில் இதற்கு உதவி புரிந்தது என்பது எனது பகிரங்க குற்றச்சாட்டு. மேலும் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், யாரும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

நான் ஏற்கனவே கூறியது போல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அச்சுறுத்தல், மிரட்டலுக்கு பயந்து கருத்து கணிப்பாக இல்லாமல் கருத்து திணிப்பாக அது வெளிவந்துள்ளது. இதில் உண்மை என்ன என்பது மே 16–ஆம் தேதி (நாளை) தான் தெரியும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.