Home India Elections 2014 தொங்கு பார்லிமென்ட் அமைந்தால் ஜனாதிபதி என்ன செய்வார்? கே.ஆர்.நாராயணன் பாணியை பின்பற்றலாம் என தகவல்!

தொங்கு பார்லிமென்ட் அமைந்தால் ஜனாதிபதி என்ன செய்வார்? கே.ஆர்.நாராயணன் பாணியை பின்பற்றலாம் என தகவல்!

720
0
SHARE
Ad

Pranabடெல்லி, மே 15 – நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பார்லிமென்ட் அமையுமானால், 1998-ல், ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணன் பின்பற்றிய நடைமுறையை, தானும் பின்பற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளதால், இம்முறை, எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற பரபரப்பு, உச்சக்கட்டத்தில் உள்ளது. ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள் வெளியிட்டன.

அவற்றில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, பெரும்பான்மை இடங்கள் கிடைக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், காங்கிரஸ் உட்பட, சில அரசியல் கட்சிகள், இந்தக் கருத்துக் கணிப்புகளை ஏற்க தயார் இல்லை.

#TamilSchoolmychoice

முந்தைய காலகட்டங்களில், இது போன்ற கருத்துக் கணிப்புகள், பல முறை பொய்யாகியுள்ளதால், இறுதி நிலவரம், ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகே தெரியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அதேநேரத்தில், எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் தனிப் பெரும்பான்மைக்கு தேவையான, 272 இடங்கள் கிடைக்காத சூழ்நிலை உருவானால், அப்போது, ஜனாதிபதியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

எனவே, தேர்தல் முடிவுகள் வெளியான பின், பிரணாப் முகர்ஜியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, டில்லியில் நேற்று, ஜனாதிபதி மாளிகையின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது, தொலைக்காட்சிகளில் வெளியிட்ட, ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பார்க்கும் போது, ஒவ்வொன்றுக்கும், நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இதுபோல நிறைய சந்தேகங்கள், குழப்பங்கள், கருத்துக் கணிப்புகளில் தென்படுகின்றன. இதை எல்லாம் பார்க்கும்போது, தொங்கு பார்லிமென்ட் அமையும் வகையில், மக்கள் தீர்ப்பு இருந்தால், அப்போது என்ன செய்வது என்பது குறித்து, கடந்த சில வாரங்களாகவே, சட்ட வல்லுனர்களுடன், ஜனாதிபதி ஆலோசனை நடத்தி வந்தார்.

இதற்காகவே, முன்னாள் சட்டத்துறை செயலரும், நாடாளுமன்ற முன்னாள் ஜெனரலுமான டி.கே.விஸ்வநாதனை, தன் சிறப்பு ஆலோசகராக biranapநியமித்து இருந்தார். அவரிடம், சட்டக் குறிப்புகளை முழுவதுமாக, கோப்பாக தயார் செய்து வாங்கி தன் வசம் வைத்துள்ளார்.

கடந்த, 1989 மற்றும், 1996ல், தொங்கு பார்லிமென்ட் அமைந்த போது, முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.வெங்கட்ராமனும், சங்கர் தயாள் சர்மாவும் ஒரே விதமான அணுகுமுறையைப் பின்பற்றினர். அதாவது, அதிக இடங்களைப் பிடித்த, தனிப்பெரும் கட்சியை அழைத்து, ஆட்சி அமைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின், தொங்கு பார்லிமென்ட் அமைந்தால், இதே அணுகுமுறையையே, இப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.

அரசுக்கு ஆதரவு அளிக்கும், கட்சிகளின் ஆதரவு கடிதங்களை, வாங்கி உறுதிப்படுத்திய பின்னரே, அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சிக்கு, ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்குவார் என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.