நியூயார்க், மே 15 – அல்ட்ரா ஹை டெபனிஷன் டிவி (UHD TV) உலக சந்தையில் விலையுயர்ந்து காணப்பட்டாலும், விரைவில் அதன் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
கடந்த 2012 ஆம் ஆண்டு உலக அளவில் வெறும் 72,000 யுஹெச்டி தொலைக்காட்சிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் இந்த கணக்கு 1.7 மில்லியனாக உயர்ந்தது. அதிலும் குறிப்பாக சீனாவில் மட்டும் இந்த வகை தொலைக்காட்சிகள் 80 சதவிகிதம் விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில், விரைவில் சீன சந்தையினை அமெரிக்க சந்தை முறியடித்து விடும் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 32 சதவிகித வீடுகளில் இந்த அல்ட்ரா ஹை டெபனிஷன் தொலைக்காட்சிகள் இருக்கும்.
அதே நேரத்தில் 22 சதவிகிதம் மேற்கு ஐரோப்பிய வீடுகளில் இந்த வகை தொலைக்காட்சிகள் இருக்கும். ஆசிய பசிபிக் நாடுகளில் 18 சதவிகிதம் யுஹெச்டி தொலைக்காட்சிகள் இருக்கும் என்று அறிக்கையொன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
சுமார் 5,000 அமெரிக்க டாலர் (16,107.50 ரிங்கிட்) விலையில் இருந்து இந்த யுஹெச்டி தொலைக்காட்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.