ஜாகார்த்தா, மே 15 – இந்தோனேசியா, ஜாகார்த்தாவில் உள்ள ஷாரிப் இடாயாத்துல்லா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் மகாதீருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது, இந்தோனேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் அன்வார் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றி உரையாற்றியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் அவர் சமய சொற்பொழிவு ஆற்ற தகுதியற்றவர் என்றும் குற்றம் சாட்டினார்.
அன்வாரே பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் போது அவர் எவ்வாறு இஸ்லாம் பற்றி சமய சொற்பொழிவாற்ற முடியும் என்று மகாதீர் கேள்வி எழுப்பினார்.
அன்வார் இஸ்லாமிய உரையாற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் மேலும் அவர் சொன்னார்.
ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்ட அவரை இஸ்லாமிய உரையாற்றுவதற்கு அழைத்திருப்பது எப்படி? என்று ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பினார் மகாதீர்.