Home கலை உலகம் அஜீத்துடன் நடிப்பது சுலபமாக இருக்கிறது – விவேக்

அஜீத்துடன் நடிப்பது சுலபமாக இருக்கிறது – விவேக்

619
0
SHARE
Ad

ajith-vivek-சென்னை, மே 15 – ‘வீரம்’ படத்தை தொடர்ந்து அஜீத், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று அஜீத்துடன் கவுதம்மேனன் ஆலோசித்து வந்தார். நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் ‘சத்யா’ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அஜீத் சத்யா என்ற பெயரில் நடிப்பதால் அதையை தலைப்பாக தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கௌதம் மேனன்.

இப்படத்தில் அஜீத்துடன் விவேக் இணைந்து நடிக்கிறார். அஜீத்துடன் இணைந்து நடிப்பது சுலபமாக இருக்கிறது என்று விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் கௌதம் மேனனுடன் நான் இப்படத்தில் இணைந்தது அழகான அனுபவம் என்றும் கூறியுள்ளார் விவேக்.