Home நாடு பிகேஆர் தேர்தல் குழப்பங்கள்: விரைவில் அன்வார் விளக்கமளிப்பார் – காலிட்

பிகேஆர் தேர்தல் குழப்பங்கள்: விரைவில் அன்வார் விளக்கமளிப்பார் – காலிட்

469
0
SHARE
Ad
kalid-ibrahim
ஷா ஆலம், மே 16 – பிகேஆரில் நடைபெற்று வரும் தேர்தல் குழப்பங்கள் அனைத்திற்கும் விரைவில் அன்வார் இப்ராகிம் பதிலளிப்பார் என சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பிகேஆர் தேர்தல் குழப்பங்கள் குறித்த கலந்தாய்வில் பேசிய காலிட் இப்ராகிம், கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அன்வார் விரைவில் அறிவிப்பார் என்று கூறினார்.
அதே நேரத்தில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் மறுதேர்தல் நடத்துவது குறித்தும், கோலசிலாங்கூரில் மாணிக்கவாசகம் போட்டியிலிருந்து விலகியது குறித்தும், அவரது இடைநீக்கம் குறித்தும் அன்வார் பொதுமக்களுக்கு விளக்கமளிப்பார் என்று காலிட் குறிப்பிட்டார்.