Home உலகம் அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு ஒபாமா அழைப்பு!

அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு ஒபாமா அழைப்பு!

499
0
SHARE
Ad

obamamவாஷிங்டன், மே 17 – நேற்று வெளியான நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க 283 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து நரேந்திர மோடி தலைமயில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.

நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இது குறித்து ஒபாமாவின் தேசிய சட்ட ஆலோசகர் பென் ரோட்ஸ் தனது வலைத்தளத்தில் “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள பா.ஜ.கவிற்கும் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல் வெள்ளை மாளிகையும் தனது வாழ்த்துகளை மோடிக்கு தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு அதிபர் ஒபாமா தொலைபேசியில் மோடியை அமெரிக்காவிற்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளார்.  மேலும் “மோடியுடன் இணைந்து பணியாற்ற விருப்பத்துடன் உள்ளதாகவும்” ஒபாமா தெரிவித்துள்ளார்.