Home உலகம் ரஷ்ய ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு! நடுவானில் வெடித்து சிதறியது!

ரஷ்ய ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு! நடுவானில் வெடித்து சிதறியது!

371
0
SHARE
Ad

Russia-Proton-M-Launchஅல்மாட்டி, மே 17 – தொலைத்தொடர்பு துறையில் ஆய்வுப்பணிகளுக்காக நவீன செயற்கைக்கோள் (தி எக்ஸ்பிரஸ்–ஏ.எம்.4ஆர்) ஒன்றை ரஷ்யா வடிவமைத்தது இருந்தது. இந்த செயற்கைக்கோளை புரோட்டான்–எம் என்ற ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து வந்தது.

அதன்படி, கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.42 மணிக்கு அந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் கிளம்பிய 9–வது நிமிடத்தில், அதன் 3–வது பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ராக்கெட் நடுவானில் சுமார் 150 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்து சிதறியது.

இதில் செயற்கைக்கோள் பாகங்கள் பசிபிக் பெருங்கடல் அல்லது சைபீரியா பகுதியில் விழுந்திருக்கலாம் என ரஷ்யத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோளளின் மதிப்பு 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகின்றது. எனினும் ராக்கெட்டின் பாகங்கள் விழுந்தது பற்றியோ, உயிர்ச்சேதம் பொருள் சேதம் பற்றியோ எந்தத் தகவல்களும் வெளியிடப் பட வில்லை.