மே 17 – கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கூகுள் கிளாஸ் சாதனமானது, தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இச்சாதனம் தற்போது பொது நோக்கங்களுக்காக பயனர்களுக்கு விற்பனை செய்யபட்டு வருகின்றது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸின் புதிய பதிப்பினை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இதற்காக கூகுள் ‘கிறிஸ்டல்ஆப்டெக்’ (Crystal Optech) நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியையும் நாடியுள்ளது.
இது குறித்து அங்கு பணியாற்றும் கோங்வேன் ஜுன் கூறுகையில், “கூகுள்கிளாஸ் தொடர்பான சில தொழில்நுட்ப மாதிரிகள் சில, கூகுள் நிறுவனத்தின்ஆர் மற்றும் டி குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த புதிய பதிப்பு பற்றி அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், கூகுள் கிளாஸின் இருப்பு இருக்கும் வரை விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கூகுள் கிளாஸின்இருப்பினை முழுவதுமாக விற்பனை செய்துவிட்டு, கூகுள் தனது அடுத்த பதிப்பினை வெளியிடலாம் என தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன.