Home உலகம் விமான விபத்து: லாவோஸ் துணைப்பிரதமர் உட்பட 17 பேர் பலி!

விமான விபத்து: லாவோஸ் துணைப்பிரதமர் உட்பட 17 பேர் பலி!

516
0
SHARE
Ad

Laosலாவோஸ், மே 18 – லாவோஸில் நேற்று  இராணுவ விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் லாவோஸ் துணைப் பிரதமர் டௌவான்சே பிசிட் உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர்.

ஷியெங் கௌவாங் விமான நிலையத்தில் இருந்து 1.5 கிலோமீட்டரில் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

துணைப்பிரதமர் பிசிட் உடன் அந்நாட்டை சில முக்கிய தலைவர்களும் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இவர்கள் அனைவரும் லாவ் இராணுவத்தின் இரண்டாவது தளப்பிரிவின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றனர் என லாவோஸ் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.