போரில் கால்களை இழந்தவர்களுக்கும், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆயிரம் செயற்கை கால்களை இலவசமாக வழங்க ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்பூர் ஃபூட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் ஆப்கானிஸ்தான் அரசோடு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் நாட்டு சமூகநலத்துறை அமைச்சர் ஆமினா அப்சாலி கூறுகையில், “இந்திய நிறுவனம் செயற்கை கால்களை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. குண்டுவெடிப்பில் கால்களை இழந்தவர்களுக்கும், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இது பயனுள்ளதாக இருக்கும். இந்த உதவி இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.