Home India Elections 2014 24-ஆம் தேதி பதவியேற்கிறார் மோடி!

24-ஆம் தேதி பதவியேற்கிறார் மோடி!

524
0
SHARE
Ad

modiiபுதுடில்லி, மே 20 – நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொள்வார் என கூறப்படுகிறது. மோடியின் பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் உள்ள போர்கோர்ட்டில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வசதி உள்ளது. அடுத்தபடியாக தர்பார் மகால் பரிசீலனையில் உள்ளது. இங்கு 500 பேர் வரை அமரும் வசதி உள்ளது. இதனிடையே, மோடி பதவியேற்பு விழாவின்போது, காசி மற்றும் வதோதராவில் இருந்து சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.