Home கலை உலகம் கவர்ச்சியாக நடிக்க ஆசை – சமந்தா!

கவர்ச்சியாக நடிக்க ஆசை – சமந்தா!

662
0
SHARE
Ad

samanthaசென்னை, மே 20 – நடிகை சமந்தாவுக்கு மலையாளப் படங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளதாம். தமிழில் சொல்லிக் கொள்கிற மாதிரி வெற்றிப் படங்களைக் கொடுக்காவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவு என்னவோ சமந்தாவுக்கு அதிகமாகத் தான் உள்ளது.

அதனால் தான் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளது போலவே தமிழிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தமிழில் விஜய்யுடன் ‘கத்தி’ படத்திலும், சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் சமந்தா.

இது போக கோலி சோடா படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரமை வைத்து விஜய் மில்டன் இயக்கவுள்ள புதிய படத்திற்கும் சமந்தா தான் நாயகி எனச் சொல்லப்படுகிறது.

#TamilSchoolmychoice

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு தற்போது மலையாளத்திலும் முன்னனி கவர்ச்சி கதாநாயகியாக வர வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளதாம்.

இதனால் மலையாளத்திலும் கதைகளை கேட்டு வருகிறாராம் சமந்தா. நல்ல சவாலான கதாபாத்திரம் கிடைத்தால் விரைவில் நல்ல அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தாவின் அம்மா கேரளாவின் ஆலப்புலாவைச் சேர்ந்தவர். அப்பா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.