‘Acoustical Recordz’ மற்றும் ‘PressPlay House’ இணைந்து நடத்திய இந்த போட்டியில் இளம் பாடகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பாடல் திறன் போட்டிக்கு நடுவர்களாக மலேசிய இசைத்துறையில் பிரபலமானவர்களாக இசையமைப்பாளர் அருண், ஜேம்ஸ்ராஜ், குமார் அருண் மற்றும் சிறப்பு நடுவராக அலி கியான் ஆகியோர் பங்கேற்றனர்.
பலகட்ட போட்டிகளுக்குப் பிறகு இறுதியாக, மாலா தேவி மனோகரன், செல்வி கணேசன், தீபன்ராஜ், ஸ்ரீதேவேந்திரகுமார் ராமசாமி, கேஷ்வினி தேவி ரமேஷ், சங்கீதா கார்த்திகேசு, ஸ்ரீதரன் புஷ்பராஜன், விநோத் குமார் ராமகிருஷ்ணன் ஆகிய 8 பேரும் வெற்றியாளர்களாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த 8 பேரும் இசையமைப்பாளர் தீபனிடம் நிரந்தர பாடகர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டு, இனி தான் இசையமைக்கும் பாடல்களுக்கு வாய்ப்ப்பளிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் திறமையுள்ள பல இளம் பாடகர்கள் உள்ளார்கள் என்றும், அவர்களை கண்டறிந்து வாய்ப்பளிக்கும் பொருட்டே இது போன்ற போட்டிகளை தான் நடத்துவதாகவும் இசையமைப்பாளர் தீபன் கூறினார்.
– ஃபீனிக்ஸ்தாசன்