Home நாடு இப்ராகிம் அலியுடன் ஜசெக வேட்பாளர் சோஃபியா புகைப்படம் – இணையத்தில் பரபரப்பு

இப்ராகிம் அலியுடன் ஜசெக வேட்பாளர் சோஃபியா புகைப்படம் – இணையத்தில் பரபரப்பு

548
0
SHARE
Ad

dyanaதெலுக் இந்தான், மே 20 – தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் ஜசெக வேட்பாளராக, அக்கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் உதவியாளர் டியானா சோபியா முகமட் டவுட் அறிவிக்கப்பட்டது தொடங்கி அவருக்கு எதிராக இணையத்தில் பல்வேறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுவருகின்றன.

ஏற்கனவே பிலிப்பைன்ஸ் நடிகையின் பிக்கினி உடையணிந்த புகைப்படத்தை வெளியிட்டு, அது சோபியா தான் என்று சில விஷமிகள் கூறினர். பின்னர் சோபியா ஆதரவாளர்கள் அப்புகைப்படம் பிலிப்பைன்ஸ் நடிகை பௌலீன் லுனாவினுடையது என்று விளக்கமளித்தனர்.

இந்நிலையில், தற்போது சோபியா பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலியுடன் நிற்கும் படமொன்று  இணையத்தில்  உலா வருகின்றது.

#TamilSchoolmychoice

அப்புகைப்படத்தில் இப்ராகிம் அலி, சோபியா மற்றும் அவரது தாயார் யம்மி சமட்டுடன் மகிழ்ச்சியோடு நிற்கிறார்.

நேற்று தெலுக் இந்தான் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்று சோபியாவின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அம்னோவின் மூத்த தலைவரான துங்கு ரசாலிக்கு சிறப்பு மரியாதை செய்யும் ஒரு நிகழ்வில் இப்ராகிம் அலியுடன் சோபியா நிற்பது போன்ற அப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜசெக- விற்கு சுத்தமாக ஆகாதவரான இப்ராகிம் அலியுடன், சோபியா நட்பு ரீதியாக நிற்கும் புகைப்படம் அக்கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக கருத்துக் கூறியுள்ள சோபியா, இப்ராகிம் அலியுடன் நிற்கும் புகைப்படத்தால், தான் அவருக்கு ஆதரவு அளிப்பதாக ஆகிவிடாது என்று கூறியுள்ளார்.