Home நாடு “நான் பிரம்மச்சாரி தான் – ஆனால் ஓரினச் சேர்க்கையாளர் அல்ல” – ராம் கர்ப்பால்

“நான் பிரம்மச்சாரி தான் – ஆனால் ஓரினச் சேர்க்கையாளர் அல்ல” – ராம் கர்ப்பால்

668
0
SHARE
Ad

ram karbal

கோலாலம்பூர், மே 20 – புக்கிட் குளுக்கோர் இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜசெக வேட்பாளரான கர்ப்பால் சிங்கின் மகன், ராம்கர்ப்பால் சிங்கின் பாலியல் தொடர்பான சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

ராம் கர்ப்பால் சிங்  ஓரினச்சேர்க்கையாளரா? என்ற சந்தேக நோக்கோடு விமர்சிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ராம்கர்பால் சிங் தனது ஃபேஸ்புக் இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள உடற்கட்டழகான ஆண்களின் புகைப்படங்களை காரணம் காட்டி அவரை நோக்கி இந்த கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து  தற்போது பார்ட்டி ஜிந்தா மலேசியா துணைத் தலைவர் ஹன் சென் குகன் கூறுகையில், “ராம் கர்பால் சிங் உடற்கட்டழகான ஆண்களின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் இணைத்துள்ளது ஏன்? அதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “ராம் கர்பாலுக்கு 38 வயதாகியும் ஏன் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் என்ன ?” என்று கேள்வி எழுப்பியிள்ளார் ஹன் சென் குகன்.

இதற்கு பதில் அளித்துள்ள ராம் கர்பால் சிங், “நான் தனியாகத்தான் இருக்கிறேன், ஆனால் ஓரினச் சேர்க்கையாளர் அல்ல. நான் விரைவில் திருமணம் செய்துகொள்வேன்” என தெரிவித்துள்ளார்.