Home India Elections 2014 நட்சத்திர வேட்பாளர்கள் #11 : வங்காள நடிகை மூன்மூன் சென் மேற்கு வங்காளத்தின் பங்குராவில் வெற்றி!

நட்சத்திர வேட்பாளர்கள் #11 : வங்காள நடிகை மூன்மூன் சென் மேற்கு வங்காளத்தின் பங்குராவில் வெற்றி!

840
0
SHARE
Ad

Moon-Moon-Sen-Bolகல்கத்தா, மே 20 – இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது சொந்தத் தயாரிப்பாக தமிழில் தனது மகன் மனோஜை வைத்து எடுத்த ‘தாஜ்மகால்’ படத்தை பலர் மறந்திருந்தாலும், அதில் கதாநாயகியாக நடித்த ரியா சென் என்ற இளம் நடிகையை பலர் மறந்திருக்கமாட்டார்கள்.

ரியா சென்னின் தாயார்தான் வங்காள நடிகை மூன் மூன் சென்.

இந்த முறை அவரை மேற்கு வங்காள மாநிலத்தின் பங்குரா தொகுதியில் தனது திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தி வெற்றியும் பெறச் செய்திருக்கின்றார் மம்தா பானர்ஜி.

#TamilSchoolmychoice

கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்

மூன் மூன் சென் ஒரு காலத்தில் பிரபல நடிகை. பல இந்திப் படங்களிலும் வங்காள மொழிப் படங்களிலும், நாடகங்களிலும் நடித்தவர்.

மூன் மூன் சென்னின்  தாயார் சுசித்ரா சென்னும் பிரபல வங்காள நடிகைதான். மூன் மூன் சென்னின் இரண்டு மகள்களான ரியா சென், ரய்மா சென் இருவரும் கூட இந்திப் படங்களில் பிரபல நடிகைகளாக திகழ்ந்து வருபவர்கள்.

Riya-Sen

 மூன் மூன் சென் மகள் – தாஜ்மகால் கதாநாயகி ரியா சென்

ஆரம்ப கட்டத்தில் தாஜ்மகால் படம் மூலம் தமிழுக்கு வந்த ரியா சென் அதன் பின்னர் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், மீண்டும் இந்திப் படவுலகுக்கே திரும்பி விட்டார்.

சுசித்ரா சென்னும் மம்தா பானர்ஜியும் நெருங்கிய நட்பு பாராட்டியவர்களாம். மம்தா சுசித்ரா சென்னுக்கு பல உதவிகள் செய்திருக்கின்றாராம். அதனால், மம்தா தன்னை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக நிற்கச் சொல்லிய போது தன்னால் தட்ட முடியவில்லை என்று மூன் மூன் சென் ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.

மூன்மூன் சென்னின் தாயார் சுசித்ரா சென் அண்மையில்தான் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகள்களின் பிரச்சாரம் உதவி செய்தது 

moon moon senமூன் மூன் சென் இளவயது நடிகையாக….

தலை தலைமுறையாக நடித்துக் கொண்டிருக்கும் கலைக் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் மூன் மூன் சென்,98,506 வாக்குகள் வித்தியாசத்தில் பங்குரா தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளரைத் தோற்கடித்திருக்கின்றார்.

இந்தத் தேர்தலில் மூன் மூன் சென்னுக்கு அவரது கணவர் தேவ் வர்மாவும் பல வழிகளில் பக்கத் துணையாக இருந்திருக்கின்றார்.

அவரது இரண்டு நட்சத்திர மகள்களும் அவருக்காக கொளுத்தும் வெயிலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்திருக்கின்றார்கள். மூன் மூன் சென்னின் வெற்றிக்கு அவரது நட்சத்திர அந்தஸ்து மட்டுமல்லாமல் மகள்களின் நட்சத்திர ஈர்ப்பும் பெருமளவில் உதவி செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.