Home நாடு மிரி – திரெங்கானு போக்குவரத்து ரத்து – ஏர்ஏசியா அறிவிப்பு!

மிரி – திரெங்கானு போக்குவரத்து ரத்து – ஏர்ஏசியா அறிவிப்பு!

1011
0
SHARE
Ad

airasiaகோலாலம்பூர், மே 21 – குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியா வரும் ஜுன் 21 ஆம் தேதி முதல், நாளொன்றுக்கு 3 முறை சென்று வந்து கொண்டிருந்த மிரி – திரெங்கானு விமானப் போக்குவரத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

எனினும், ஜுன் 1 ஆம் தேதிக்குப் பிறகான பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்தவர்கள், தங்கள் பயண காலத்தை கூடுதல் கட்டணம் எதுவும் இன்றி குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு இது குறித்த தகவல்கள் மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் தொலைபேசி அழைப்பு வழியாக தெரிவிக்கப்படும் என்றும் ஏர்ஏசியா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேல் விபரங்களுக்கு உடனடியாக ஏர்ஏசியா வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.