Home India Elections 2014 நரேந்திர மோடியைக் கொல்ல தீவிரவாதிகள் சதியா?– திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

நரேந்திர மோடியைக் கொல்ல தீவிரவாதிகள் சதியா?– திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

699
0
SHARE
Ad

Narendra-Modiபுதுடில்லி, மே 23 – பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கான பாதுகாப்பு வளையங்கள் மேலும் இறுக்கமாகி வருகின்றன. இந்த நடவடிக்கை எல்லா இந்தியப் பிரதமர்களைப் போல்தான் என்றாலும், நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளிடம் இருந்து தாக்குதல் நேரலாம் என்ற அபாயம் இருப்பது காவல் துறை விசாரணைகளில் தெரிய வருகின்றது.

பீகார் மாநிலம் பாட்னா வில் கடந்த அக்டோபர் மாதம்  நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய சென்ற போது அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் காவல் துறையினர் தங்களின் புலன் விசாரணையை முடுக்கி விட்டதன் பலனாக,கடந்த புதன்கிழமை அதிகாலை,ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹைதர்அலி,  முஜிபுல்லா, நுமன் அன்சாரி மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.

#TamilSchoolmychoice

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தீவிரவாதிகள்

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி மற்றும் சில பகுதிகளில் அவர்கள் ரகசியமாக தங்கி இருந்தனர். அவர்களது வீடுகளில் தேசிய புலனாய்வுப் படையினரும் ஜார்க்கண்ட் போலீசாரும் சேர்ந்து அதிரடிசோதனை நடத்தியுள்ளார்கள்.

அப்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் வரை படங்கள், மின்னியல் (எலக்ட்ரானிக்) கருவிகள், கைத்தொலைபேசிகள், ரெயில்  கட்டணச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதன் மூலம் அவர்கள்  4 பேரும் நாச வேலை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கைதான 4 பேரில் ஹைதர் அலி,  முஜிபுல்லா இருவரும் நாளை (சனிக்கிழமை) டில்லி செல்ல ரெயிலில் முன்பதிவு செய்திருந்தனர்.

எதிர்வரும் 25-ந்தேதி டெல்லியில் இருந்து அமிர்தசரசுக்கும், பிறகு 27-ஆம் தேதி அமிர்தசரசில் இருந்து  லக்னோ திரும்பவும் அவர்கள் விரைவு (எக்ஸ்பிரஸ்) ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

நரேந்திர மோடியைக் கொல்ல சதியா?

நரேந்திரமோடி  பதவி ஏற்கும் சமயத்தில்அவர்கள் டில்லி மற்றும் பஞ்சாப்புக்கு செல்ல முயன்றது தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அல்லது பஞ்சாபில் மிகப் பெரிய  நாசவேலைக்கு அவர்கள் திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஹைதர் அலி, முஜிபுல்லா இருவரிடமும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் கயாவில் உள்ள புத்தர் கோவிலில் கடந்த ஜூலை மாதம்  குண்டு வெடிப்பை நடத்தியது ஹைதர் அலி என்று தெரியவந்துள்ளது.

அல்கொய்தா, தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்களுடனும் ஹைதர் அலி தொடர்பு வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹைதர் அலியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நரேந்திர மோடியை கொல்ல தீவிரவாதிகளின் குழுக்கள் ஒருங்கிணைந்து இருக்கும் திடுக்கிடும்  தகவலும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில்இயங்கும் தீவிரவாத இயக்கங்கள் மோடியை கொல்ல பொதுவான ஒரு தற்கொலைப் படையை உருவாக்கி இருப்பதாக ஜார்க்கண்டில் பிடிபட்ட 4 தீவிரவாதிகளும் கூறியுள்ளனர்.

இந்த  திட்டத்துக்காக அவர்கள் நேபாள எல்லைக்கு செல்லஇருந்தனர். அதற்குள் போலீசாரிடம்  பிடிபட்டுவிட்டனர்.

மோடியைக் கொல்ல பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருக்கும் தகவலை  உளவுத்துறையும் உறுதிசெய்து ஏற்கனவே எச்சரித்துள்ளது.

எனவே மோடிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.