Home கலை உலகம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – ரஜினி வீட்டருகே பரபரப்பு!

மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – ரஜினி வீட்டருகே பரபரப்பு!

433
0
SHARE
Ad

rajini-kanthசென்னை, மே 26 – டெல்லியில் நடைபெறும் விழாவில் மோடி, பிரதமராக பதவியேற்கிறார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய் ஆகியோருக்கும் மோடி தனியாக அழைப்பு விடுத்திருந்தார்.

ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதால் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ரஜினி செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரஜினியின் இந்த செயலைக் கண்டித்து, அவரின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் முன், பாலச்சந்திரா மாணவர்கள் கூட்டமைப்பினரை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்து, தேனாம்பேட்டையில் உள்ள சமூகநலக் கூடத்தில் அடைத்து வைத்தனர்.