Home வணிகம்/தொழில் நுட்பம் நிதி மோசடி வழக்கு: ஆம்வே இந்தியா நிறுவன சி.இ.ஓ கைது!

நிதி மோசடி வழக்கு: ஆம்வே இந்தியா நிறுவன சி.இ.ஓ கைது!

462
0
SHARE
Ad

william-scott-pinckney-600-jpgஹைதராபாத், மே 27 – அமெரிக்காவில் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான ‘ஆம்வே’யின் இந்திய கிளை தலைவரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆம்வே நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் வாயிலாக, தவறான முறையில் பண சுழற்சி செய்து வந்ததையடுத்து, பரிசுத் தொகை சீட்டுகள் மற்றும் பண பரிவர்த்தனை (தடுப்பு) சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வில்லியம் எஸ் பிங்க்னி-யை ஆந்திர மாநில போலீசார் குர்கான் நகரில் திங்களன்று கைது செய்தனர்.

ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் இவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கர்நூல் மாவட்ட கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். இதேபோன்ற முறைகேடுகள் தொடர்பாக கடந்த ஆண்டு கேரள போலீசாரும் இவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice