Home நாடு சரவா ஆளுநர் தாயிப்பிற்கு துன் பட்டம்!

சரவா ஆளுநர் தாயிப்பிற்கு துன் பட்டம்!

617
0
SHARE
Ad
Taib Mahmud

கோலாலம்பூர், மே 27 – சரவாக் மாநில ஆளுநர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்டிற்கு ‘துன்’ எனப்படும் ஸ்ரீ மஹா ராஜா மங்கு நெகாரா (எஸ்எம்என்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை மாட்சிமை தங்கிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹலிம் அட்ஸாம் ஷா கடந்த மே 25 -ம் தேதி வழங்கி கௌரவித்தார்.

இந்த விருதளிப்பு நிகழ்ச்சி இஸ்தானா நெகாராவின்  பாலாய்  ரோம் ஸ்ரீ மண்டபத்தில் (அரியணை அறை) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஜா பெர்மைசூரி அகோங் துவாங்கு ஹாஜா ஹமீனாவும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவரின் துணைவியார் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், துணைப் பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின், சரவாக் மாநில முதலமைச்சர் டான் ஸ்ரீ அடேனான் சாத்தேப், தாயிப்பின் துணைவியார் புவான் ஸ்ரீ ராகான் குர்டி தாயிப் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 28 -ம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய தாயிப் சரவாக் மாநிலத்தின் ஏழாவது ஆளுநராக கடந்த மார்ச் முதல் தேதி பதவியேற்றார்.