Home இந்தியா இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

620
0
SHARE
Ad

Narendra Modi swearing inபுதுடில்லி, மே 27 – மறைந்த இந்திரா காந்தி குடும்பத்தின் ஆதிக்கமும் செல்வாக்கும் இன்னும் காங்கிரசில் நீடித்து நிலைத்திருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், இந்திரா காந்தி குடும்பத்தின் இரண்டு உறுப்பினர்கள் இந்த பொதுத் தேர்தலின் வழி பாஜகவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றார்கள் என்பது மற்றொரு சுவாரசியமான செய்தி.

இந்திரா காந்தியின் இரண்டு புதல்வர்கள் ராஜிவ் காந்தியும், சஞ்சய் காந்தியும்.

#TamilSchoolmychoice

ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியும் மகன் ராகுல் காந்தியும் காங்கிரஸ் சார்பாக முறையே ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் வென்று, நாடாளுமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றார்கள்.

அதே சமயம்,  சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியும் மகன் வருண் காந்தியும் பாஜக சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக வென்றிருக்கின்றார்கள்.

நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மேனகா காந்தி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மேனகா காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் காட்சியை இங்கே காணலாம்.