Home இந்தியா இந்திய மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்!

இந்திய மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்!

995
0
SHARE
Ad

பெங்களூரு – நரேந்திர மோடியின் மத்திய பாரதிய ஜனதா அரசில் இரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வரும் அனந்தகுமார் இன்று திங்கட்கிழமை அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார்.

59 வயதான அனந்தகுமார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராவார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் இவர் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனந்தகுமாருக்கு புற்றுநோய் பீடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

#TamilSchoolmychoice

உடல் நலம் தேறியதும் நாடு திரும்பிய அனந்த குமார் மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.