Home இந்தியா பாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்

பாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்

1033
0
SHARE
Ad

புதுடில்லி – தன்மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் புகார்களை பொய் என மறுத்திருக்கும் வெளியுறவு துணையமைச்சர் எம்.ஜே.அக்பர், அதற்காக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.

அதே வேளையில் தன்மீது பாலியல் புகார்கள் கூறிய பிரியாரமணி என்ற பெண்மணி மீது அக்பர் வழக்கு தொடுத்துள்ளார்.

பாஜக அரசாங்கத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னால் நாட்டின் முன்னணி பத்திரிக்கையாளராக அக்பர் விளங்கிய காலகட்டத்தில் அவர் சில பெண்மணிகளுக்கும் சக பணியாளர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்கள் எழுந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற அறைகூவல்களும் வலுத்து வருகின்றன.