Home இந்தியா எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி

எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி

1143
0
SHARE
Ad
எல்.முருகன் – பாஜகவின் மத்திய இணை அமைச்சர்

புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில்  இடம் பெற்றிருப்பவர் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான எல்.முருகன். மீன்வளம், கால்நடை வளர்ப்பு அமைச்சின் இணை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார்.

இவர் ஒரு வழக்கறிஞருமாவார். இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும் இவர் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராகவில்லை. எனவே, அமைச்சராகப் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, ராஜ்ய சபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினராகவோ இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி முருகன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் முருகன் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட பாஜக முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முருகன் இந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க, அதில் இணை அமைச்சராக முருகன் நியமிக்கப்பட்டார்.

ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு பதவிதான் வகிக்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கைக்கு ஏற்ப இணை அமைச்சரானதும் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அவருக்குப் பதிலாக அண்ணாமலை பாஜக தமிழ்நாடு தலைவராகத் தற்போது செயலாற்றி வருகிறார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal