Home நாடு தெலுக் இந்தான் இடைத்தேர்தல்: ஜசெக கட்சிக்கு வாக்களிக்கும் சீனர்கள் நன்றி மறந்தவர்கள் – சாஹிட்

தெலுக் இந்தான் இடைத்தேர்தல்: ஜசெக கட்சிக்கு வாக்களிக்கும் சீனர்கள் நன்றி மறந்தவர்கள் – சாஹிட்

607
0
SHARE
Ad
ahmad zahid

கோலாலம்பூர், மே 27 – தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் ஜசெக கட்சிக்கு வாக்களிக்கும் சீனர்கள், குறிப்பாக வியாபாரத்தில் வெற்றியடைந்தவர்கள்  நன்றி மறந்தவர்கள் என உள்துறை அமைச்சரான சாஹிட் ஹமீடி குற்றம் சாட்டியுள்ளார்.

“வியாபாரத்தில் பெரிதும் ஆதரவு கொடுத்து, அவர்களை பணக்காரர்களாக்கிய மலாய்காரர்களையும், இந்தியர்களையும் மறந்துவிட்டு ஜசெக கட்சிக்கு வாக்களித்தால் நான் மிகவும் வருத்தமடைவேன். அதைவிட மலாய்காரர்களும், இந்தியர்களும் வருத்தமடைவார்கள்” என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய முன்னணி அரசாங்கம் ஒற்றுமையுடன், அனைத்து மக்களையும் ஒன்றாகக் கருதி, அவர்களின் நலனில் கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதாகவும் சாஹிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் அனைவரும் இணைந்து தேசிய முன்னணி வேட்பாளர் மா சியு கியோங்கிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் சாஹிட் கூறியுள்ளார்.