கோலாலம்பூர், மே 28 – காட்பரி சாக்லேட்டில் பன்றி கொழுப்பு சம்பந்தப்பட்ட உயிர் மரபணுக்களைக் கொண்ட (டிஎன்ஏ ) பொருட்கள் கலந்திருப்பதை மலேசிய சுகாதார அமைச்சு கண்டறிந்ததையடுத்து காட்பரி நிறுவனத்தின் மீது இஸ்லாமிய அரசு சாரா அமைப்புகள் சில கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, சந்தையில் விநியோகம் செய்யப்பட்ட அனைத்து சாக்லேட்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக காட்பரி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் இசாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காட்பரி நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு தீ வைக்கப்போவதாக கூறிய சில இஸ்லாம் அரசு சாரா இயக்கங்களை மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
படம்: EPF