கோலாலம்பூர், ஜூன் 4 – காட்பரி சாக்லெட்டுகளின் இரு மாதிரிகளில் பன்றியின் மரபணு அறிகுறி எதுவும் காணப்படவில்லை. அதனால் அவை ஹலால் பொருட்கள் என மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், சுகாதார அமைச்சை சேர்ந்த யாரோ ஒருவர் அவசரப்பட்டு தவறான முறையில் சோதனை நடத்தி உண்மை தெரியாத நிலையில் இந்தத் தகவலை வெளியிட்டு விட்டார் என்று கூறப்படுகின்றது.
இதுகுறித்து தீவிர விசாரணை செய்யப்படும் என டத்தோ டாக்டர் ஹில்மி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காட்பரி சாக்லெட்டுகள் ஹலால் பொருட்கள் என மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ள நிலையில், இதில் இரண்டு வகைகளில் பன்றியின் மரபணு இருந்ததாக கூறப்பட்ட தகவலை சுகாதார அமைச்சில் இருந்து கசியச் செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
காட்பரி சாக்லெட்டுகளில் டிஎன்ஏ கலந்திருப்பதாகக் கூறிய தொடக்க நிலை அறிக்கையை வெளியிட்டவரை கண்டுபிடிக்க உள்துறை அமைச்சுக்குள்ளேயே விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.