கோலாலம்பூர், மே 2 – காட்பரி சாக்லேட்டில் பன்றியின் உயிர் மரபணுக்கள் இருப்பதாக கூறப்பட்டதில் இருந்து, தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் பின்வாங்கியுள்ளனர்.
அது போன்ற பொருட்கள் எதுவும் காட்பரியில் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
முன்பு சோதனை செய்யப்பட்ட அதே வகை காட்பரி சாக்லேட்டில் மீண்டும் ஒரு சோதனை மேற்கொண்டதில் பன்றி சம்பந்தப்பட்ட பொருட்கள் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் ஜாமில் கிர் பாஹ்ரோம் தெரிவித்துள்ளார்.
காட்பரி டெய்ரி மில்க் ஹேஸல்னட் மற்றும் காட்பரி டெய்ரி மில்க் ரோஸ்ட் ஆல்மண்ட் ஆகிய இரு வகை சாக்லேட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஜாமில் கூறியுள்ளார்.
கடந்த வாரம், சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காட்பரி சாக்லேட்டில் பன்றியின் உயிர் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டது.
இதனால் இஸ்லாம் அமைப்புகள் அந்நிறுவனத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.