Home நாடு தியோமான் தீவு: காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையின் உடல் கண்டெடுப்பா?

தியோமான் தீவு: காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையின் உடல் கண்டெடுப்பா?

645
0
SHARE
Ad

Huntly

புலாவ் தியோமான், ஜூன் 4 – தியோமான் தீவில் காணாமல் போன கேரத் ஹண்ட்லி என்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டூழியரை தேடும் பணியில் புதிய திருப்பமாக, அப்பகுதியில் குளம் ஒன்று அருகே அடையாளம் தெரியாத ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த உடல் கேரத் ஹண்ட்லியின் உடல் தானா என்பதை காவல்துறை இன்னும் உறுதிசெய்யவில்லை. தற்போது அவ்வுடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கடல் ஆமைகள் மீதான ஆய்வுத் திட்டத்தின் கீழ் தியோமானில் தங்கியிருந்த கேரத், கடந்த மே 27 -ம் தேதி காணாமல் போனார்.

அடர்ந்த காட்டுப் பகுதியான அங்கு, கேரத் எங்காவது காயம் அடைந்திருக்கலாம் அல்லது வழி தெரியாமல் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என்று நம்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர், வனத்துறையினர், மீட்புக் குழுக்கள் என பலக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தீவிர தேடும் பணி நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.