Home நாடு தியோமான் தீவின் சடலம் காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜைதான்!

தியோமான் தீவின் சடலம் காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜைதான்!

723
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 8 – சில நாட்களுக்கு முன்னால் தியோமான் தீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம், காணாமல் போன பிரிட்டிஷ் நாட்டின் பிரஜை கேரத் டேவிட் ஹண்ட்லி என்பவருடையதுதான் என்பதை நேற்று மலேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த மே 27ஆம் தேதி முதல் காணாமல் போன கேரத் ஹண்ட்லியை தேடும் வேட்டையில் ஏறத்தாழ 100 பேர் கொண்ட, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த  சிறப்புப் படையினர் ஈடுபட்டனர்.

Search for missing Briton Gareth David Huntley

#TamilSchoolmychoice

கேரத் டேவிட் ஹண்ட்லி

Malaysian searchers find body in jungle where Briton went missing

தியோமான் தீவில் கடந்த ஜூன் 4ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட கேரத் ஹண்ட்லியின் சடலத்தோடு தேடுதல் படைவீரர்கள்…

Search for missing Briton Gareth David Huntley

தாயின் சோக காத்திருப்பு – கேரத் ஹண்ட்லியின் தாயார் ஜேனட் சவுத்வெல் (நடுவில்) மற்றும் அவரது காதலி கிட் நடாரிகா  (இடது) மற்றொரு தோழியுடன் கடந்த ஜூன் 5ஆம் தேதி குவாந்தான் மருத்துவமனையில் காத்திருந்தபோது…

படங்கள்: EPA