Home உலகம் பிரெஞ்ச் பொது டென்னிஸ் – மரியா ஷரபோவா வாகை சூடினார்!

பிரெஞ்ச் பொது டென்னிஸ் – மரியா ஷரபோவா வாகை சூடினார்!

539
0
SHARE
Ad

பாரிஸ், ஜூன் 8 – அண்மையக் காலங்களில் டென்னிஸ் போட்டிகளில் எதுவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிராத ரஷியாவின் மரியா ஷரபோவா, மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விதமாக, பிரெஞ்ச் பொது (ஓப்பன்) டென்னிஸ் போட்டியில் முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடியிருக்கின்றார்.

அவர் பிரெஞ்ச் பொது டென்னிஸ் போட்டியில் வெற்றியாளராக வாகை சூடுவது இது இரண்டாவது முறையாகும்.

சைமன் ஹாலிப் என்ற சக போட்டியாளரை அவர் இறுதி ஆட்டத்தில் தோற்கடித்தார்.

#TamilSchoolmychoice

French Open tennis tournament at Roland Garros

வெற்றியாளர் கிண்ணத்தை முத்தமிடும் மரியா ஷரபோவா….

French Open tennis tournament at Roland Garros

இறுதிப் புள்ளியைப் பெற்ற வெற்றிக் களிப்பில்….

படங்கள்: EPA