Home வணிகம்/தொழில் நுட்பம் சர்வதேச விமான தொழில்துறையின் இலாப சதவீதங்கள் முன்னறிவிப்பு! 

சர்வதேச விமான தொழில்துறையின் இலாப சதவீதங்கள் முன்னறிவிப்பு! 

652
0
SHARE
Ad
IATA
ஜூன் 4 – சர்வதேச விமான தொழில்துறை வர்த்தக அமைப்பு, சமீபத்தில் விமானப் போக்குவரத்து துறையின், இந்த ஆண்டிற்கான இலாப சதவீதங்களை முன்னறிவிப்பாக வெளியிட்டது.

சற்றே தொய்வை சந்தித்துள்ள இந்த துறையின் இலாப சதவீதங்கள், சீனாவின் பொருளாதார மந்த நிலையை பொறுத்து எதிரொலிக்கின்றன என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) கூறியுள்ளது.

அந்த வர்த்தக அமைப்பு, விமானப் போக்குவரத்து துறை இந்த ஆண்டு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இலாபம் அடைய வாய்ப்புள்ளது என அறிவித்து இருந்தது. இது கடந்த ஆண்டை விட 0.7 பில்லியன் குறைவாகும். மேலும், விமானத் துறையின் இலாபங்களில் வீழ்ச்சி ஏற்படக் காரணம், சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே என்று கூறியுள்ளது.

இது பற்றி சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பொது இயக்குனர் டோனி டெய்ளர் கூறுகையில், “எதிர்வரும் நாட்களில் விமான நிறுவனங்களுக்கு கடுமையான சிக்கல்கள் காத்து இருக்கின்றன. உள்கட்டமைப்பு செலவுகள், விமான போக்குவரத்து மேலாண்மை, பலமான வரிச்சுமையை மற்றும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் விமான நிறுவனங்கள் சந்தித்தாக வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

2014-ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வருவாய் 746 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகா இருக்கும் என்று கூறப்படுகின்றது.