Home நாடு “குர்ஆனை சரியாகப் பின்பற்றாததால் வந்த விளைவு” – ஜாயிஸின் செயலுக்கு மகாதீர் கருத்து

“குர்ஆனை சரியாகப் பின்பற்றாததால் வந்த விளைவு” – ஜாயிஸின் செயலுக்கு மகாதீர் கருத்து

544
0
SHARE
Ad

Mahathirகோலாலம்பூர், ஜூன் 4 – மணப்பெண்ணின் பெயர், அடையாளங்கள் இஸ்லாமிய முறைப்படி இருப்பதால், அவரது திருமணத்தில் புகுந்து அதைத் தடுத்து நிறுத்திய சிலாங்கூர்  இஸ்லாமிய  சமயத்துறையின் (ஜாயிஸ்) செயல் தவறு என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

ஜாயிஸ் அதிகாரிகள் திருகுர்ஆனை வாசிக்க வேண்டும் என்றும், அதில் பிற மதத்தினரின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற செயல்களுக்கெல்லாம் காரணம் குர்ஆனை முறையாக வாசிக்காமல், பிறர் சொல்வதைக் கேட்டு பின்பற்றுவது தான் என்றும் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

“நீங்கள் விசாரணை செய்யலாம் ஆனால் ஒருவரின் திருமணத்தை தடுத்து நிறுத்தக்கூடாது” என்று மகாதீர் கூறினார்.

கோம்பாக்கிலுள்ள யுனிவர்சிடி  இஸ்லாம்  அந்தாராபங்சா (யுஐஏ) -வில் இன்று, ‘இன்றைய இஸ்லாமியர்களின் வாழ்க்கைமுறை’ என்ற தலைப்பில் மகாதீர் சொற்பொழிவு ஆற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோயில் ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தில் புகுந்த இஸ்லாமிய சமய அதிகாரிகள் (ஜாயிஸ்), மணப்பெண் முஸ்லிம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.