Home நாடு பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களை திரும்ப ஒப்படைத்தது ஜாயிஸ்!

பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களை திரும்ப ஒப்படைத்தது ஜாயிஸ்!

996
0
SHARE
Ad

JAIS-ALKitab-300x202

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 14 – மலேசிய பைபிள் சமூகத்திடமிருந்து (பிஎஸ்எம்) கைப்பற்றிய 321 பைபிள்களையும் ஜாயிஸ் (சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை) இன்று சரவாக் தேவாலயங்களின் சங்கத்திடம் திரும்ப ஒப்படைத்தது.

கிள்ளானிலுள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் இன்று கூச்சிங் பிஷப், டத்தோ பாலி லாப்போக் ஆகியோர் முன்னிலையில் ஒரு சிறிய அளவிலான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு மலாய் மற்றும் இபான் மொழியில் இருந்த பைபிள்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்வில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் ஷா, மந்திரி பெசார் அஸ்மின் அலி மற்றும் ஜாயிஸ் அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.