கைதானவர்களில் பெரும்பாலானோரிடம் வேலை செய்வதற்கான பெர்மிட் இல்லை எனவும், அகதிகளுக்கான ஐ.நா., அணையர் அளித்துள்ள ஆவணங்களை மட்டுமே வைத்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
“சோதனை நடவடிக்கை நீடித்து வருகிறது. நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள முதலாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்,” என்றார் சாஹிட்.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என்று குறிப்பிட்ட அவர், நேபாளம் மற்றும் மியன்மரைச் சேர்ந்தவர்களும் உள்ளதாகத் தெரிவித்தார்.
“இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அனுமதிக்க இயலாது. சம்பந்தப்பட்ட முகவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவர். அட்டர்னி ஜெனரலின் ஒத்துழைப்புடன் இத்தகைய முகவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
ஏனெனில் இத்தகைய சட்டவிரோத செயல் மூலம் அம்முகவர்கள் பெருந்தொகையைச் சம்பாதித்து வருகின்றனர்,” என்று சாஹிட் மேலும் தெரிவித்தார்.