Home இந்தியா கிரிக்கெட்: நான்காவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

கிரிக்கெட்: நான்காவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

529
0
SHARE
Ad

India v Sri Lanka: Semi Final - ICC Champions Trophyகொல்கத்தா, நவம்பர் 14 – இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் துவங்கி 150 ஆண்டு ஆகியுள்ளதை கொண்டாடும் நாளில் இந்த போட்டி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை காண வந்திருந்தனர்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.

#TamilSchoolmychoice

rohitgh1இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி 43.1 ஓவர்களில் ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்களுக்கும் குறைவாக 251 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியில் கேப்டன் மேத்யூஸ் மட்டுமே அதிகபட்சமாக 75 ரன்களை எடுத்தார். மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளை கொண்டத் தொடரில் இந்திய அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.