இந்த புதிய வசதி மூலம் பயனர்கள், தங்கள் நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் ‘காணொளி அட்டைகள்’ (video cards)-ஐ உருவாக்கி, அவர்களுக்கு அனுப்ப முடியும்.
பேஸ்புக் நிறுவனம் பயனர்களைக் கவர்வதற்காகவும், இணையம் மூலமாக தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தவும் பல்வேறு புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
நண்பர்களுக்கு மத்தியில் இருக்கும் தொலைவை வெகுவாகக் குறைத்துவிட்ட பேஸ்புக், தற்போது அறிமுகப்படுத்தி உள்ள சே தேங்க்ஸ் வசதி மூலமாக நட்பைப் போற்ற மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், “பல மில்லியன் பயனர்கள் தினமும் பேஸ்புக்-ஐ பயன்படுத்தி தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.
நாங்கள் எப்போதும் பயனர்களின் நட்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்புகளை தொடர்ந்து செய்து வருகின்றோம். அதற்கான மற்றுமொரு சான்றுதான் சே தேங்க்ஸ் வசதி” என்று கூறியுள்ளது.