பெய்ஜிங், நவம்பர் 14 – ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், அமெரிக்காவின் தலையீடு ஏதும் இல்லை என அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்ட அவர், ஹாங்காங்கின் ஜனநாயகப் போராட்டத்தில், அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக சீன ஊடகங்களின் குற்றச்சாட்டு பற்றி கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
“ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதில்லை. ஏனெனில் அது ஹாங்காங் மற்றும் சீன மக்களால் சேர்ந்து தீர்க்கப்பட வேண்டிய ஒன்று” என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஒபாமாவுடன் உடனிருந்த சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூறுகையில், “ஹாங்காங் போராட்டம் சட்டவிரோதமான ஒன்று. இது முற்றிலும் சீனாவின் தனிப்பட்ட பிரச்னை. இதில் எந்த ஓரு அந்நிய நாடும் தலையிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.