கதை சொன்னபோது ரொம்ப நன்றாக இருந்ததாம். ஆனால் படப்பிடிப்புக்கு வந்தபோது, எடுக்கப்பட்ட காட்சிகளைக் கண்டு மிரண்டு போனாராம்.
ஒரு ஆசிரியையை 12 வயது மாணவன் தப்பான பார்வையோடு பார்ப்பதுதான் படம். உளவியல் ரீதியான சிக்கலை அவிழ்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டு, எதை எதையோ அவிழ்க்க கிளம்பியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.
“இந்த படத்தில் உங்களுக்கு பதினாறு பதினேழு வயசில் ஒரு பையன் ஜோடி’ என்றுதான் முதலில் சொல்லி இருந்தாராம் ராம் கோபால். தன்னை விட ரெண்டு மூணு வயசுதானே சின்னவர்.
பிறகென்ன…! இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கழன்று கொண்டார். தற்போது, பூனத்திற்கு பதிலாக பிரபல மாடல் அனுஷ் கிருதியை நடிக்க வைத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.