‘பிரதமர் அலுவலகம்’ இந்தியா என்ற பெயருடன் பிரதமர் நரேந்திரமோடி பணியில் ஈடுபட்டிருப்பது போன்ற புகைப்படத்துடன் ‘ஃபேஸ் புக்’ இணையத்தள முதல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பக்கத்தில் பிரதமரின் அன்றாட நிகழ்வுகள், தலைவர்களுடனான சந்திப்புகளின் புகைப்படங்கள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
அதில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமர் மோடி சனிக்கிழமை அறிவுறுத்தியிருந்த செய்தியை வரவேற்று ஆயிரக்கணக்கானோர் ‘லைக்ஸ்’ (விருப்பம்) பதிவுகளையும், நூற்றுக்கணக்கான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளையும் ‘பேஸ் புக்’ இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்ட மோடி அதன் மூலம் மக்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்று கருதுகிறார். மேலும் தனது அமைச்சரவையினரும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்று மோடி எதிர்பார்ப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடிதம் மூலம் அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.