Home இந்தியா இன்று திமுக தலைவர் கருணாநிதியின் 91 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

இன்று திமுக தலைவர் கருணாநிதியின் 91 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

648
0
SHARE
Ad

karunanithiசென்னை, ஜூன் 3 – இன்று திமுக தலைவர் கருணாநிதியின் 91 வது பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாக கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமது 91 வது பிறந்த நாளை முன்னிட்டு கருணாநிதி, அண்ணா நினைவிடம், மற்றும் பெரியார் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை  செலுத்தினார்.

karunaanithi91 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தற்போது சென்னை அறிவாலயத்தில் தமதுக் கட்சித் தொண்டர்களை கருணாநிதி சந்தித்து வருகிறார். தமிழகம் எங்கிலும் உள்ள திமுக தொண்டர்கள் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகின்றனர்.

karunanidhi-அரசியல் குறித்த தமது கனவு தொடரும் என்று தமது பிறந்தநாள் செய்தியாக குறிப்பிட்டுள்ள கருணாநிதி, தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக நேற்று திமுகவினருக்கு விடுத்த கோரிக்கையில், திமுக கட்ட்சியினர் தங்களைத் தாமே சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என தெரிவித்திருந்தார்.