Home அவசியம் படிக்க வேண்டியவை இலங்கை மீது நேரடி கவனம் செலுத்த மோடி சிறப்பு பிரதிநிதியை நியமிப்பார் – அரசதந்திர வட்டாரங்கள்...

இலங்கை மீது நேரடி கவனம் செலுத்த மோடி சிறப்பு பிரதிநிதியை நியமிப்பார் – அரசதந்திர வட்டாரங்கள் கருத்து

473
0
SHARE
Ad

modiபுதுடில்லி, ஜூன் 3 – தமிழகம் முழுக்கவும் ஒருமித்த குரலில் எழுந்து வரும் எதிர்ப்புக் கணைகளைத் தொடர்ந்து,இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி இலங்கை மீது தன் நேரடி கவனத்தைக் செலுத்துவதற்காக சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்கக் கூடும் என இந்திய அரசதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து புதுடில்லியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதே போன்று தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தமிழக அரசியல் கட்சிகள் காட்டிய எதிர்ப்பு இலங்கை விவகாரத்தில் மோடியின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்று மத்திய அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

#TamilSchoolmychoice

தன் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து மோடி  மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் சிறை பிடிப்பது, துப்பாக்கிச் சூடு நடத்துவது பற்றிய பல பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.

ஆனால், இன்று வெளிவந்த செய்திகளின்படி, தமிழக மீனவர்களை கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடிக்கும் வேளையில் இலங்கைக் கடற்படையினர் துரத்தியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இலங்கை மீதான தனது நேரடி கவனத்தைச் செலுத்தும் நோக்கில், அரசியல் நிலவரங்களைக் கண்காணிப்பதற்கும், தனக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கும் தனி பிரதிநிதி ஒருவரை நரேந்திர மோடி நியமிக்கவுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதி கூடுதல் அதிகாரங்களுடன் செயல்படக் கூடியவராக இருப்பார் என்றும் கூறப்படுகின்றது.