Home உலகம் சீனாவில் கரியமில வாயுக்களைக் கட்டுப்படுத்த ஐந்தாண்டு திட்டம்!

சீனாவில் கரியமில வாயுக்களைக் கட்டுப்படுத்த ஐந்தாண்டு திட்டம்!

505
0
SHARE
Ad

green houseபெய்ஜிங், ஜூன் 4 – சமீப காலங்களில் சீனாவில், பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் கரியமில வாயுக்கள் அதிக அளவில் வெளியாகின்றன.

இதனை தடுக்கவும், விரைவில் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் புதிய திட்டம் ஒன்றை வரும் 2016-ம் ஆண்டு செயல்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது.

இந்த இலக்கு தொடர்பாக சீனாவின் அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என சீனாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவின் தலைவர் ஹி ஜியான்குன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த அரசு இரண்டு வழிகளை கையாள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்பனை அதிக அளவில் வெளியிடும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், மின் உற்பத்தி நிறுவனங்களில் கார்பன் வெளியேற்றத்தை தடுக்க முதல் முறையாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.