Home கலை உலகம் விருது விழாவுக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாய் வந்த பாப் பாடகி ரிஹானா!

விருது விழாவுக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாய் வந்த பாப் பாடகி ரிஹானா!

510
0
SHARE
Ad

rihanaநியூயார்க், ஜூன் 4 – அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார்.

அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை. ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. ரிஹானா இப்படி ஆபாசமாக ஆடை அணிந்து வந்ததை பலரும் வாயை பிளந்து அதிர்ச்சியில் பார்த்தனர்.