Home இந்தியா வெளியறவுக் கொள்கை குறித்த பேச்சுவார்த்தை- ஒபாமாவின் அழைப்பை ஏற்ற மோடி!

வெளியறவுக் கொள்கை குறித்த பேச்சுவார்த்தை- ஒபாமாவின் அழைப்பை ஏற்ற மோடி!

539
0
SHARE
Ad

narendra-modi-obamaபுதுடில்லி, ஜூன் 5 – நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவின் போது சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து அண்டை நாடுகளுடனான பகையுணர்வும மறையும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

இந்நிலையில், வெளியறவுக் கொள்கையில் முன்னேற்றம் காண அமெரிக்கா வரும்படி அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார்.

இதன்படி வரும் செப்டம்பர் மாதம் கடைசிவாரத்தில் குறிப்பாக 26-ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா. சபையில் மோடி உரை நிகழ்த்த உள்ளார். அச்சமயத்தி்ல இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணம் காட்டி மோடி அமெரிக்கா வருவதற்கான விசாவை அந்நாடு ரத்து செய்திருந்தது. மோடியின் வழி காட்டுதலையடுத்து இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து அமெரி்க்காவும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து மோடி தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.இரு தலைவர்களுடனான சந்திப்பு வெளியுறவுக் கொள்கையில் புதியமாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.