Home உலகம் மனித ஆன்மா தொடர்பான புத்தகத்தின் அட்டைக்கு பெண்ணின் தோல் – அதிகாரிகள் அதிர்ச்சி

மனித ஆன்மா தொடர்பான புத்தகத்தின் அட்டைக்கு பெண்ணின் தோல் – அதிகாரிகள் அதிர்ச்சி

704
0
SHARE
Ad

Human skinவாஷிங்டன், ஜூன் 6 – அமெரிக்காவின் மிகவும் பிரசித்திப் பெற்ற ஹார்வர்டு நூலகம் உள்ளது. அங்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட மற்றும் விஞ்ஞானத்திற்கு பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த நூலகத்தில் மனித ஆன்மா குறித்த புத்தகம் ஒன்றிற்கு அட்டையாக இறந்த பெண் ஒருவரின் தோல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நூலகத்தில் சில புத்தகங்களின் அட்டை வித்தியாசமான தோல் போன்ற பொருட்களால் மேலுறை (பைண்டிங்) செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவை எதனால் ஆனவை என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

அதன்படி அங்கிருந்த 3 புத்தகங்களின் மேல் அட்டை தோலினால் ஆனது என்று சந்தேகித்த அதிகரிகள் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பினர்.

பரிசோதனைக்கு அனுப்பியதில் இரண்டு புத்தகங்கள் ஆட்டுத் தோலினாலும் மற்றொரு புத்தகம் பெண்ணின் தோலினாலும் செய்யப்பட்டது என்று ஆராய்ச்சியில் தெரிந்தது.

மனித தோலால் மேல் அட்டை போடப்பட்டுள்ள புத்தகம் மனித ஆன்மாவை வசப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இதனை ஒரு பிரெஞ்சு நாவலாசிரியர் தொகுத்து புத்தகமாக்கியுள்ளார்.

அந்த புத்தகத்தின் அட்டைக்கு மேலுறையாக மாரடைப்பால் மரணம் அடைந்த அடையாளம் தெரியாத ஒரு மனநோயாளி பெண்ணின் தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளது.

அந்த தோலின் ரோமக் கால்களை மிக துல்லியமாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ‘ஒரு வேளை இந்த புத்தகம் மனித ஆன்மா சம்பந்தப்பட்டது என்பதற்காக மேல் அட்டையாக மனிதத் தோலை பயன்படுத்தி இருபக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.