Home வணிகம்/தொழில் நுட்பம் ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை 6 மாதங்களுக்கு நீக்கம்!

ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை 6 மாதங்களுக்கு நீக்கம்!

595
0
SHARE
Ad

01-oil-barrelsவாஷிங்டன், ஜூன் 6 – தனது சர்ச்சைக்குரிய அணு ஆயுதத் திட்டங்களை ஈரான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைகளுக்கு இணங்க தளர்த்திக் கொண்டுள்ளதால், சர்வதேச சந்தையில் அந்நாட்டு எண்ணெய்க்கான தடையை அமெரிக்க அதிபர் ஒபாமா 6 மாதம் நீக்கியுள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரான ஜே கார்னி கூறியதாவது:-

“இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்களின் எண்ணெய் தேவைக்காக ஈரானை சார்ந்து இருப்பதை குறைத்துக் கொள்ளும் அளவுக்கு, சர்வதேச சந்தையில் தேவையான எண்ணெய் வளம் உள்ளது. எனினும், அணு ஆயுதத் திட்டத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு ஈரான் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால், அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்நாட்டின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு தடை தேவையில்லை என ஒபாமா கூறியுள்ளார்.”

“இது போன்ற தடை நீக்க நடவடிக்கைகளின் பலனாக, ஈரானும் தனது அணு ஆயுத திட்டத்தை நிறுத்திக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் இணங்கி வருவதை சர்வதேச அணுசக்தி அமைப்பும் உறுதி செய்துள்ளது” என்று ஜே கார்னி கூறியுள்ளார்.